குந்துகோல் தாலுகாவில் 7 ஆயிரம் மாடுகள் சின்னம்மை நோயால் பாதிப்பு

குந்துகோல் தாலுகாவில் 7 ஆயிரம் மாடுகள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-10-06 19:00 GMT

உப்பள்ளி;

சின்னம்மை நோய் பாதிப்பு

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவில் பெரும்பாலான விவசாயிகள் சொந்தமாக மாடுகளை வளர்ந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அங்குள்ள மாடுகளுக்கு சின்னம்மை நோய் பாதிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து அவர்கள் தாலுகா கால்நடை மருத்துவமனையில் மாடுகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் ஏராளமான மாடுகளுக்கும் சின்னம்மை நோய் பரவியது. இந்த நிலையில் மாவட்டத்தில் 27 ஆயிரம் மாடுகளில் 7 ஆயிரம் மாடுகளுக்கு சின்னம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கோரிக்கை

இந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நோய் தொற்று குணமாகவில்லை. மேலும் மாடுகளுக்கு மருந்து கிடைக்காமல் டாக்டர்கள் திணறி வருகிறார்கள். நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் 124 மாடுகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர். தினந்தோறும் 500 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாடுகளின் உரிமையாளர்கள் டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தார்வார் மாவட்டத்தில் மாடுகளுக்கு சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கால்நடைகளை நம்பி தான் நாங்கள் உள்ளோம். இதனால் மாநில அரசு நடவடிக்கை எடுத்து மாடுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்