உப்பள்ளியில் விதவை பெண்ணை கற்பழித்த 3 பேர் கைது

உப்பள்ளியில், விதவை பெண்ணை கற்பழித்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-11-03 18:45 GMT

உப்பள்ளி;

விதவை பெண் கற்பழிப்பு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கசபாபேட்டை பகுதியில் விதவை பெண் வசித்து வருகிறார். இவர் உதயநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு நடத்து சென்று வருவது வழக்கம். இதற்கிடையே அவருக்கு கசபாபேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த அல்தாப் உசேன் (வயது 28), மலிக் (35) மற்றும் முபாரக் (39) ஆகிய 3 பேரும் தினமும் பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

அவர்களை அந்த பெண் எச்சரித்து உள்ளார். ஆனாலும் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி அந்த விதவை பெண் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழக்கம் போல் அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை தூக்கி சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு தொழிற்சாலை அருகே வசித்து வந்த மக்கள் ஓடி வந்தனர். இதையறிந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

கைது

இதுகுறித்து அந்த பகுதியினர் கசபாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட விதவை பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடிவந்தனர். நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியில் போலீசார் ேராந்து பணியின்போது விதவை பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி ஓடிய உசேன், மலிக், முபாரக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் நேற்று கைதான 3 பேரையும் தார்வார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்