வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாப சாவு
கோலாரில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோலார்:-
கோலார் புறநகர் பகுதி தேசிய நெடுஞ்சாலை 75-ல் பெத்தல்நகர் அருகே பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற கார் எதிரே சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மொதியது. அதில் மோட்டார் சைக்கிள் சென்ற பயாஸ் (வயது 13) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சலீம் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதும் டிரைவர் பிரேக் பிடித்தார். இதில் நிலை தடுமாறி கார் புறவழி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பயணித்த கர்ப்பிணி படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்ற வருகிறார். அதேபோல் தேசிய நெடுஞ்சாலை உள்ள இன்டியன் பப்ளிக் பள்ளிக்கூடம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் திலீப் (30) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தவிபத்துக்கள் குறித்து கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.