சிக்கமகளூருவில்காபித்தோட்ட உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு

சிக்கமகளூருவில் காபிதோட்ட உரிமையாளா் வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகை திருடிய வழக்கில் 2 பேரை போலீசாா் கைது செய்தனர்.

Update: 2023-08-22 18:45 GMT

சிக்கமகளூரு

சிக்கமகளூருவில் காபிதோட்ட உரிமையாளா் வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகை திருடிய வழக்கில் 2 பேரை போலீசாா் கைது செய்தனர்.

காபி தோட்ட உரிமையாளர்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கணகசூர் கிராமத்தை சோ்ந்தவா் வேதாவதி. இவருக்கு சொந்தமான காபி தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வேதாவதி காபி தோட்டத்திற்கு சென்றார்.

இதனை அறிந்த மர்மநபர்கள் வேதாவதியின் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து தங்கநகைளை திருடிவிட்டு சென்றனா்.

பின்னா் வீட்டிற்கு வேதாவதி வந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 78 கிராம் தங்க நகைகளை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.4¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

அதனை மர்மநபர்கள் திருடிசென்றது தொியவந்தது. இதுகுறித்து வேதாவதி ேகானிபீடு ேபாலீசில் புகார் அளித்தாா்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதுகுறித்து கோனிபீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த சாமி, அவரது நண்பரான தாவணகெரே மாவட்டம் ெசன்னகிரியை சோ்ந்த சஞ்சய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் காபி தோட்ட உரிமையாளர் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.4¼ லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் சிக்கமகளூரு, தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பின்னர் சாமி, சஞ்சய் ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்