சிக்கமகளூருவில் தூய்மை பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி; கலெக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார்
சிக்கமகளூருவில் தூய்மை பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூருவில் உள்ள சுபாஸ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. நேற்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு போட்டியை கலெக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அவர் பேசுகையில், தூய்மை பணியாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து நகரை சுத்தமாக வைத்துள்ளனர். தினமும் உழைக்கும் அவர்கள் புத்துணர்ச்சி பெற இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் அவசியம்.
3 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு போட்டி மூலம் அவா்களின் மனதுக்கு ஓய்வு கிடைக்கும். இதனை தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தி கொண்டு, உல்லாசமாகவும், சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்றார்.
இந்த போட்டியில், நகரசபை தலைவர் வேணுகோபால், நகரசபை கமிஷனர் பசவராஜ், தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் அன்னய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.