சிக்கமகளூருவில் ரூ.17 லட்சம் செலவில் குப்பை கழிவுகள் சேமிப்பு கிடங்கு; நகரசபை தலைவர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
சிக்கமகளூருவில் ரூ.17 லட்சம் செலவில் அமையபோகும் குப்பை கழிவுகள் சேமிப்பு கிடங்கிற்கு நகரசபை தலைவர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு நகரில் நகரசபை சார்பில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மல்லந்தூர் ரோட்டில் உள்ள இந்தாவரா பகுதியில் அமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கில் கொட்டப்படுகிறது.
இந்த நிலையில் ரூ.17 லட்சம் செலவில் மேலும் ஒரு குப்பை கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் நகரசபை தலைவர் வரசித்தி வேணுகோபால் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து குப்பை கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.