குடும்பத்தகராறில்கர்ப்பிணியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டணை- சாம்ராஜ்நகர் கோர்ட்டு தீர்ப்பு

குடும்பத்தகராறில் கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சாம்ராஜ்நகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-15 18:45 GMT

கொள்ளேகால்:

கர்ப்பிணி கொலை

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ஜோதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. முதலில் சந்தோஷமாக இருந்த இருவருக்கும் நாளடைவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தகராறு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜோதி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

அப்போது குடும்பத்தகராறு காரணமாக தாய் வீட்டில் இருந்த ஜோதியை, முத்துராஜ் சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஜோதியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

கணவருக்கு ஆயுள் தண்டனை

இந்த கொலை குறித்து கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சாம்ராஜ்நகர் மாவட்ட செஷன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வக்கீல்களும் வாதாடினர்.

நேற்று இறுதி விசாரணை முடிந்து நீதிபதி பாரதி தீர்ப்பு கூறினார். அதில் கர்ப்பிணி மனைவியை கொன்ற முத்துராஜிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்