கர்நாடகத்தில் 3 இடங்களில் வெயில் 'சதம்' அடித்தது
விஜயாப்புரா, கலபுரகி, ராய்ச்சூர் ஆகிய நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
பெங்களூரு-
கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. நேற்று விஜயாப்புரா, கலபுரகி, ராய்ச்சூர் ஆகிய நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. இதில் குறைந்த பட்சமாக சிக்கமகளூவில் 83.48 டிகிரி வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் பின்வருமாறு:-
கார்வார் - 96.8 டிகிரி
மங்களூரு - 98.96 டிகிரி
பெலகாவி - 93.2 டிகிரி
பீதர் - 98.6 டிகிரி
விஜயாப்புரா - 100.76 டிகிரி
தார்வார் - 94.64 டிகிரி
கதக் - 96.8 டிகிரி
கலபுரகி - 106.88 டிகிரி
ஹாவேரி - 95.72 டிகிரி
கொப்பல் - 97.7 டிகிரி
ராய்ச்சூர் - 100.04 டிகிரி
பெங்களூரு ஏர்போர்ட் - 86.72 டிகிரி
பெங்களூரு நகரம் - 87.08 டிகிரி
பெங்களூரு புறநகர் - 86.72 டிகிரி
பல்லாரி - 93.56 டிகிரி
சாம்ராஜ்நகர் - 90.32 டிகிரி
சிக்கமகளூரு - 83.48 டிகிரி
சித்ரதுர்கா - 89.6 டிகிரி
தாவணகெரே - 95 டிகிரி
ஹாசன் - 93.56 டிகிரி
சிந்தாமணி - 93.02 டிகிரி
மண்டியா - 92.48 டிகிரி
மைசூரு - 97.16 டிகிரி
சிவமொக்கா - 91.4 டிகிரி