நண்பரின் சகோதரர் என ஏமாற்றி தொழில் அதிபரிடம் ரூ.5¼ லட்சம் மோசடி

மங்களூருவில், நண்பரின் சகோதரர் என ஏமாற்றி தொழில் அதிபரிடம் ரூ.5¼ லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-09-23 19:15 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மட்டகனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழில்அதிபர் ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை எடுத்து ெதாழில்அதிபர் பேசினார்.

எதிர்முனையில் பேசிய நபர், உங்களது கல்லூரி நண்பரின் சகோதரர் என்றும், தற்போது எனது சகோதரருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை நீங்கள் கொடுத்தால் சில மாதங்களில் திருப்பி கொடுத்து விடுவதாக கூறி உள்ளார்.

இதனை நம்பிய தொழில்அதிபர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5.35 லட்சம் வரை அனுப்பி உள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. மேலும் அந்த நபரை, தொழில் அதிபரால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் நண்பரின் சகோதரர் என கூறி மர்மநபர் ரூ.5.35 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மங்களூரு சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்