அசாமில் ஐ.ஐ.டி. மாணவர் விடுதி அறையில் மர்ம மரணம்; முதல்-மந்திரி வேதனை

அசாமில் ஐ.ஐ.டி. மாணவர் விடுதி அறையில் மர்ம மரணம் அடைந்து கிடந்த சம்பவத்தில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா வேதனை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-10-15 16:59 GMT



கவுகாத்தி,


அசாமின் தின்சுகியா பகுதியை சேர்ந்தவர் பைஜான் அகமது (வயது 23). ஐ.ஐ.டி. காரக்பூரில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உள்ளே நுழைந்தபோது, அகமது மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா வேதனை தெரிவித்து உள்ளார். தின்சுகியா பகுதியை சேர்ந்த இளம் மாணவரான பைஜான் அகமது துரதிர்ஷ்டவச முறையில் மரணம் அடைந்தது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்