ஐகோர்ட்டு- கிளைகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

ஐகோர்ட்டு- கிளைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-27 22:02 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் பெங்களூருவில் ஐகோர்ட்டு செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தார்வார், கலபுரகி ஐகோர்டு கிளைகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் சுதந்திர தின பவள விழாவையொட்டி கடந்த 15-ந்தேதி ஐகோர்ட்டுகள் வழக்கம் போல் இயங்கின. இதனால் பெங்களூரு, தார்வார், கலபுரகி ஐகோர்ட்டுகளுக்கு கடந்த 15-ந்தேதி வேலை பார்த்ததற்கு பதிலாக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக ஐகோர்ட்டு பதிவாளர் (பொறுப்பு) பி.முரளிதர் பை அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்