எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என முதல்-மந்திரியிடம் கூறினேன்; ஈசுவரப்பா பேட்டி

எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று முதல்-மந்திரியிடம் கூறினேன் என்று ஈசுவரப்பா கூறினார்.

Update: 2023-02-03 18:45 GMT

பெங்களூரு:

மந்திரிசபை விரிவாக்கம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈசுவரப்பா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக மந்திரிசபையை விரைவில் விரிவாக்கம் செய்வதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே கூறினார். மந்திரிசபையை விரைவாக விஸ்தரிக்குமாறு முதல்-மந்திரியிடம் கூறினேன். ஆனால் மந்திரிசபையை இதுவரை விஸ்தரிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று முதல்-மந்திரியிடம் கூறியுள்ளேன்.

எனக்கு நற்சான்றிதழ்

ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் என் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் இருந்து எனக்கு நற்சான்றிதழ் கிடைத்துள்ளது. என் மீது எந்த தவறும் இல்லை. ஊழல் வழக்கில் டி.கே.சிவக்குமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ., வருமான வரி, அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய டி.கே.சிவக்குமார் பா.ஜனதா அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்