எனக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்காதது மனவருத்தம் அளிக்கிறது
தனக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
சிவமொக்கா;
மனவருத்தம்
சிவமொக்காவில் நேற்றுமுன்தினம் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாடீல் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய அமைப்பு எனக்கும், அந்த தற்கொலைக்கும் தொடர்பு இல்லை என்று அறிக்கை அளித்துள்ளது.
ஆனால் அந்த அறிக்கை வந்த பின்பும் எனக்கு மீண்டும் மந்திரி பதவி தராமல் காலம் தாழ்த்துவது என்னை வருத்தமடைய செய்துள்ளது.மந்திரிசபையை விஸ்தரிக்கலாம் அல்லது காலியான இடத்திற்கு யாரையாவது நியமிக்கலாம்.
நிரபராதி
ஆனால் இரண்டையும் செய்யாமல் காலம் கடத்துவது சரி இல்லை. வேறு ஒரு மந்திரி ராஜினாமா கடிதம் கொடுத்ததற்கும், நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததற்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு. என் மீதான குற்றச்சாட்டு தவறு என்றும், நான் நிரபராதி என்று தெரிந்தும் கட்சி மேலிடம் இதுநாள் வரை மந்திரி சபையில் என்னை சேர்த்துக் கொள்ளாமல், கருத்து தெரிவிக்காதது என்னை வருத்தமடைய செய்துள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா விரைந்து முடிவு மேற்கொள்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.