பாஜக ஆட்சியை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறேன் - முதல்-மந்திரி நிதீஷ்குமார்

பாஜகவை அகற்ற எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன் என்று பிகார் முதல்-மந்திரி நிதீஷ்குமார் கூறினார்.

Update: 2023-02-26 02:48 GMT

பாட்னா,

பிகார் மாநிலம் புர்னியா பகுதியில் மகா கூட்டணி பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி நிதீஷ்குமார் பேசியதாவது:-

பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்தால் மக்களவைத் தோ்தலில் 100 இடங்களுக்குள்ளாக அவா்களைத் தோற்கடிக்க முடியும். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளும் வரும் மக்களவைத் தோ்தலில் ஓரணியில் நிற்க வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். காங்கிரஸ் முடிவில்தான் பாஜகவின் தோல்வி இருக்கிறது.

இந்த வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டால் பாஜகவின் வெற்றியை நிச்சயம் தடுக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அகற்ற எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். அதில் வெற்றி காண தொடா்ந்து முயல்வேன். ஏனென்றால், நாட்டில் இருந்து துரத்தப்பட வேண்டிய கட்சி பாஜக.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்