ரோகிணி சிந்தூரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறேன்ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா டுவிட்டரில் கருத்து

நான் ரோகிணி சிந்தூரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறேன் என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தனது டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.

Update: 2023-02-23 06:45 GMT

பெங்களூரு, 

டுவிட்டர் பதிவு

ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தனது டுவிட்டர் பக்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது குற்றச்சாட்டு கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-அன்புமிக்க பத்திரிகையாளர்களே, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக நான் எழுப்பியுள்ள ஊழல் புகார்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துங்கள். ஊழலுக்கு எதிராக போராடுகிறவர்கள் யாரையும் நான் தடுக்கவில்லை. ஊழல் சாமானிய மக்களை தான் அதிகம் பாதிக்க செய்கிறது. அதே நேரத்தில் வேறு வடிவத்திலும் விசாரணை நடைபெற வேண்டும்.

குடும்பங்கள் அழிந்துவிடும்

அதாவது தமிழ்நாட்டில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். நானும், எனது கணவரும் இன்னும் ஒன்றாக தான் வாழ்கிறோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.இந்த தவறை செய்து கொண்டிருக்கும் குற்றவாளியிடம் (ரோகிணி சிந்தூரி) கேள்வி எழுப்புங்கள். அவரது செயல் பல குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுத்துகிறது.இல்லாவிட்டால் இன்னும் பல குடும்பங்கள் அழிந்துவிடும். நான் வலுவான பெண். அவருக்கு எதிராக போராடுவேன். அவரால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்காகவும் நான் போராடி கொண்டிருக்கிறேன். அனைத்து பெண்களுக்கும் என்னை போல் போராடும் பலம் இருப்பது இல்லை. அத்தகைய பெண்களுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். இந்தியா குடும்ப கலாசாரங்களுக்கு பெயர் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். இதை நாம் பாதுகாக்க வேண்டும். நன்றி.  இவ்வாறு ரூபா தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்