கணவன் கழுத்தை நெரித்து கொலை்;கள்ளக்காதலனுடன் மனைவி கைது

பண்ட்வால் அருகே காதல் கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை, கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-28 18:45 GMT

மங்களூரு:-

கள்ளக்காதல்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுவை ஈட்கீதுவை அடுத்த குமேரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் பாஸ்கர் (வயது 39). இவரது மனைவி ஆஷா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அரவிந்த் தனது குமேரு கிராமத்தில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வந்தார். இந்த வீட்டிற்கான கட்டுமானப் பொறுப்பை யோகேஷ் கவுடா என்பவரிடம் வழங்கியிருந்தார். அப்போது யோகேஷ் கவுடாவுக்கும் ஆஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதற்கிடையில் ஆஷா தனது கணவர் பெயரில் இருந்த சொத்தை விற்று, யோகேசிற்கு செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அரவிந்த் , ஆஷா மற்றும் யோகேஷ் கவுடாவை எச்சரித்தார். ஆனால் யோகேஷ் கவுடா கேட்கவில்லை. தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.

காதல் கணவன் கொலை

இதனால் அடிக்கடி அரவிந்த் மற்றும் ஆஷாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கோபமடைந்த ஆஷா தனது கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது கள்ளக்காதலின் உதவியை நாடினர். அதை கேட்ட கள்ளக்காதலன் யோகேஷ் கவுடா, அரவிந்த்தை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் கடந்த 26-ந் தேதி காலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த அரவிந்த் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

இதை பார்த்த ஆஷா உடனே உறவினர்களை அழைத்து கூறினார். விரைந்து ஓடி அவர்கள் அரவிந்த் உடலை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ட்வால் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.

மனைவி உள்பட 2 பேர் கைது

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர். நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அந்த அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் மனைவியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். பின்னர் போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் ஆஷா மீது கொலை வழக்கு பதிவு ெசய்து அவரை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக கள்ளக்காதலன் யோகேஷ் கவுடாவை கைது செய்தனர். 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்