ரேணிகுண்டா அருகே மனைவி, குழந்தையை கொன்று உடல்கள் கால்வாயில் வீச்சு - போலீஸ் விசாரணை

ரேணிகுண்டா அருகே மனைவி, குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-15 00:31 GMT

திருப்பதி:

திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் குருவராஜுபள்ளி பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் குமார். இவரின் மனைவி பவானி. அவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 4 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த குமார் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை வெளியில் அழைத்துச் சென்று, கொலை செய்து அங்குள்ள கால்வாயில் வீசி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரேணிகுண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்குள்ளவர்களின் உதவியோடு பெண் மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ரேணிகுண்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்