உத்தரகாண்டில் இரண்டு பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணிகள் தீவிரம்
உத்தரகாண்டில் புலி ஒன்று இரண்டு பேரை கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ரிஷிகேஷ்,
உத்தரகாண்டின் கார்பெட் புலிகள் சரணாலயத்தின் சர்ப்துலி எல்லையில் இதுவரை இருவரைக் கொன்று ஒருவரை காயப்படுத்திய புலியை பிடித்து கூண்டில் அடைக்கவும் தலைமை வனவிலங்கு காப்பாளர் பராக் மதுகர் தாகேட் நேற்று ஒப்புதல் அளித்தார்.
இந்த புலியை பிடிப்பதற்காக ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், இந்த முயற்சிக்கு உதவும் வகையில் திகலாவில் இருந்து இரண்டு யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
புலியை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.