தெலுங்கானாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து

தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Update: 2023-01-19 23:47 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரின் நல்லகுட்டா பகுதியில் பிரபலமான தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இருந்து நேற்று கரும்புகை வெளிவந்ததால் அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிரேன் உதவியுடன் 6 பேர் மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மின்கசிவால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்