அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்பின் இந்திய வருகைக்கு மத்திய அரசின் செலவு எவ்வளவு?

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி 2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தார்.

Update: 2022-08-19 00:56 GMT

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்ப், மனைவி மெலனியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர், உயர் அதிகாரிகளுடன் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி 2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவர் ஆமதாபாத், ஆக்ரா, டெல்லி நகரங்களுக்கு சென்றார்.

24-ந் தேதி ஆமதாபாத்தில் 3 மணி நேரத்தை கழித்தார். அங்கு 22 கி.மீ. சாலை பேரணி சென்றார். அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் ஆக்ராவுக்கு சென்று உலக அதிசயமான தாஜ்மகாலை கண்டு ரசித்தார். பின்னர் டெல்லி சென்று பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். டிரம்பின்

இந்த இந்திய பயணத்துக்கு மத்திய அரசு செலவு செய்தது எவ்வளவு என கேட்டு மிஷல் பதேனா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு மத்திய வெளியறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் டிரம்பின் 36 மணி நேர இந்திய வருகையின்போது அவருக்கு தங்கும் வசதி செய்து தந்தது, உணவு வழங்கியது, தளவாடங்கள் பயன்படுத்தியது என சுமார் ரூ.38 லட்சத்தை மத்திய அரசு செலவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்