குதிரை பந்தய சூதாட்டம்; 2 பேர் பிடிபட்டனர்
குதிரை பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் பிடிபட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரண்மனை ரோடு 2-வது மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் வைத்து குதிரை பந்தய சூதாட்டம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஓட்டலுக்கு சென்ற போலீசார் அங்கு குதிரை பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல மாகடி ரோடு பகுதியிலும் குதிரை பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் வயாலிகாவல், மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.