கேரள மக்களுக்கு நன்றி...நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் - ராகுல்காந்தி உருக்கமான டுவீட்

18 நாள் பாத யாத்திரையை முடித்து கொண்டு தமிழகம் வரும் ராகுல் காந்தி, கேரள மக்களுக்கு நன்றி...நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

Update: 2022-09-29 08:47 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் 18நாட்கள் பாத யாத்திரையை முடித்துக்கொண்டு இன்று மதியம் மீண்டும் தமிழக எல்லையான கூடலூர் மலைப்பகுதிக்குள் வரும் ராகுல்காந்தி, கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டும் நன்றி கேரளா...! என வீடியோவும் வெளியிட்டு உள்ளார்.

அதில், அன்பு கிடைக்கும் இடம் வீடு, கேரளா எனக்கு வீடு. நான் எவ்வளவு பாசத்தைக் கொடுத்தாலும், இங்குள்ளவர்களிடம் இருந்துதான் எனக்கு அதிகப் பிரதிபலன் கிடைக்கும். நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி. ♥️

இந்த அழகான மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணம்த்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் மற்றும் யுடி எப் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள், கேரள காவல்துறை, ஊடகவியலாளர்கள் மற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் நான் முழு மனதுடன் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு எங்கள் உறுதியையும், எங்கள் முன்னேற்றத்தையும் வலுப்படுத்துகிறது என பதிவிட்டு, தனது கேரள பயணத்துடனான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்