இந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கிறது : பிரதமர் மோடி
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் சிறப்பு பெருமை சேர்த்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்வு திறன் எப்போதும் மக்களை ஈர்க்கிறது. நாட்டின் மிகப்பெரிய பேசும் மொழியை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மோடி அதில் தெரிவித்துள்ளார்.