மின்கம்பத்தில் தூக்குப்போட்டு ஹெஸ்காம் ஒப்பந்த ஊழியர் சாவு
பெலகாவியில் மின்கம்பத்தில் தூக்குப்போட்டு ஹெஸ்காம் ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
பெலகாவி:
பெலகாவி மாவட்டம் அதானி தாலுகாவில் உப்பள்ளி மின்வினியோக அலுவலகம்(ஹெஸ்காம்) உள்ளது. இந்த அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத்(வயது 30) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று அலுவலக வளாகத்தில் உள்ள மின்கம்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட சக ஊழியர்கள் இதுகுறித்து அதானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது முதலில் தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த 2 நாட்களாக மனஉளைச்சலில் இருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.