அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம்; டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் - நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

டெல்லி-குருகிராம் விரைவு சாலையில் டெல்லி போலீசார் வாகன சோதனையை நடத்தி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-20 05:18 GMT

புதுடெல்லி,

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரெயில்களுக்கு தீவைப்பு, பஸ்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பல பகுதிகளிலும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி பஸ், ரெயில் நிலைய பகுதியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை. பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என அந்தந்த மாநிலங்களில் உள்ள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி போலீசார் தீவிர வாகன சோதனையை தொடங்கியுள்ளதால் டெல்லி-குருகிராம் விரைவுச் சாலையில் உள்ள சர்ஹால் எல்லையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெல்லி-குருகிராம் விரைவு சாலையில் உள்ள சர்ஹவுல் எல்லையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்கள் இன்ச் இன்ச் ஆக நகர்ந்து செல்கின்றன. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்