மைசூருவில் கனமழை;ரூ.15 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் நாசம்

மைசூருவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் நாசம் அடைந்தன.

Update: 2023-05-13 18:45 GMT

மைசூரு-

மைசூருவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் நாசம் அடைந்தன.

கனமழை

கர்நாடகத்தில் கடந்த சில நாட்கள் கனமழை பெய்தது. குறிப்பாக மைசூரு மாவட்டத்தில் இந்த கனமழையால் பொதுமக்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகினர். இந்நிலையில் டி.நரசிப்புரா தாலுகா குச்சனூர் கிராமத்தில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கபட்டன. மேலும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் கனமழை காரணமாக குச்சனூர் கிராமத்தில் மரிமல்லப்பா என்பருக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் விளை வித்திருந்த வாழை மரங்கள் மழை மற்றும் சூறாவளி காற்றால் முறிந்து விழுந்தது. இதனால் ரூ.15 லட்சம் மதிப்பிலான 5,500 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இது குறித்து மரிமல்லப்பா கூறியதாவது:-

ரூ.15 லட்சம் நஷ்டம்

வங்கியின் பல லட்சம் கடன் வாங்கி இந்த வாழை கன்றுகளை நட்டு விவசாயம் செய்து வந்தேன். 6 மாதங்களாக இந்த விவசாயம் செய்து வருகிறேன். வாழைக்காய்களை அறுவடை செய்யவேண்டிய காலம் வந்தது. திடீரென்று இந்த மழை காரணமாக அனைத்து வாழை மரங்களையும் முறித்துவிட்டது. இதனால் ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கான இழப்பீடு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்