செல்லகெரேவில் பலத்த மழை

செல்லகெரேவில் பலத்த மழையால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-29 18:45 GMT

சிக்கமகளூரு-

சித்ரதுர்கா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் சித்ரதுர்கா பகுதியில் திடீரென மழை பெய்தது.செல்லகெரே பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சித்ரதுர்கா-செல்லகெரே சாலையில் இருந்த ராட்சத மரம் விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் மரத்தை வெட்டும் பணி தாமதம் ஆனது. இதுகுறித்து ெசல்லகெரே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்