கனமழை எதிரொலி; பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கர்நாடகாவின் பெங்களூரு கிழக்கு மண்டலத்தின் முதல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு கனமழையை முன்னிட்டு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-06 15:47 GMT

பெங்களூரு,



கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, ஹாசன், மண்டியா உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை-வெள்ளம் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, இந்திராநகர், எச்.ஏ.எல். உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளில் சிக்கியுள்ள குடியிருப்புவாசிகள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

கர்நாடகாவின் பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக நகரெங்கும் சாலைகளில் நீர் தேங்கி காணப்படும் சூழலில், முதல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்