பணியில் அலட்சியமாக இருந்ததேர்தல் அதிகாரி பணி இடைநீக்கம்

பணியில் அலட்சியமாக இருந்த தேர்தல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-04-12 18:45 GMT

உப்பள்ளி-

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13-ந்தேதி நடக்கிறது. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். உப்பள்ளி-தார்வார் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பணிக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வராமல் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் உப்பள்ளி- தார்வார் மாநகராட்சியில் அதிகாரியாக பணிபுரியும் நவீன்.டி.சூர்யவம்சி கலந்து கொள்ளவில்லை. இவர் உப்பள்ளி-தார்வார் கிழக்கு தொகுதியில் 94-வது வாக்குசாவடி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான விவரங்களை கலெக்டரிடம் சமர்ப்பிக்கவில்லை. மேலும் பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரி நவீனை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் குருதத்த ஹெக்டே உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்