ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்திருந்தால் மந்திரி ஆகி இருக்க முடியாது; சட்டசபையில் சி.டி.ரவி பேச்சு

ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்திருந்தால் மந்திரி ஆகி இருக்க முடியாது என்று சட்டசபையில் சி.டி.ரவி பேசினார்.

Update: 2023-02-13 21:55 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் சி.டி.ரவி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எனது தந்தை தேவேகவுடாவின் தீவிரமான பற்றாளராக இருந்தார். நான் எனது தந்தையின் வழியை பின்பற்றி ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்திருந்தால், தேவேகவுடாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக கோஷம் போட்டு கொண்டு தான் இருந்திப்பேன். நான் ஒரு எம்.எல்.ஏ.வாகவோ அல்லது மந்திரியாகவோ ஆகி இருக்க முடியாது. ஆனால் நான் எனது தந்தையின் வழியை பின்தொடரவில்லை. பா.ஜனதாவுக்கு வந்ததால், நான் மந்திரி ஆனேன். நான் பா.ஜனதாவுக்கு வந்ததால் பாரத மாதாவுக்கு கோஷம் போட கற்று கொண்டேன். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான் 4 முறை எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறேன். பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக பதவியில் உள்ளேன்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்