பா.ஜனதாவுக்கு தாவிய டெல்லி கவுன்சிலர் ஆம் ஆத்மியில் மீண்டும் சேர்ந்தார்..!!

பா.ஜனதாவுக்கு தாவிய டெல்லி கவுன்சிலர், ஆம் ஆத்மியில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார்.

Update: 2023-05-14 20:04 GMT

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பவன் ஷெராவத். இவர், மாநகராட்சி கூட்டம் நடப்பதற்கு முன்பே கடந்த பிப்ரவரி மாதத்தில் பா.ஜனதாவுக்கு தாவினார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். இத்தகவலை டெல்லி மாநகராட்சியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் அறிவித்தார். ஆம் ஆத்மிக்கு திரும்பியது, சொந்த வீட்டுக்கு திரும்பி வந்ததுபோல் இருப்பதாக பவன் ஷெராவத் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தோளோடு தோள் சேர்ந்து பாடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்