கடந்த 4 ஆண்டு கால தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் 130 வெறுப்பு செய்திகள் மாநிலங்களவையில் தகவல்

5 மாநில சட்டசபை தேர்தல்கள் வரை சமூக வலைத்தளங்களில் 130 வெறுப்பு செய்திகள் இடம் பெற்றதாக புகார் பதிவாகி உள்ளது.

Update: 2022-08-05 21:30 GMT

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இந்த ஆண்டு நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்கள் வரை சமூக வலைத்தளங்களில் 130 வெறுப்பு செய்திகள் இடம் பெற்றதாக புகார் பதிவாகி உள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது 58 வெறுப்பு செய்திகளும், கடந்த ஆண்டு தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது 29 வெறுப்பு செய்திகளும் புகாருக்கு உள்ளாகின.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்