கல்லூரி விழாவில் பாகிஸ்தான் வாழ்க கோஷம்; மாணவ மாணவி மீது வழக்கு

கர்நாடகாவில் தனியார் பொறியியல் கல்லூரி விழாவில் பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பிய மாணவ மாணவி மீது வழக்கு பாய்ந்து உள்ளது.

Update: 2022-11-19 09:05 GMT



பெங்களூரு,


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பல கல்லூரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், பலரும் தங்களுக்கு பிடித்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து, கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் இருந்த மாணவர் மற்றும் மாணவி என இருவர் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர். இதனை பார்த்த, மற்ற மாணவ மாணவியர் திகைத்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிறுத்தும்படி கூறினர். அதன்பின்பு, அவர்கள் இருவரும் அமைதியாகி உள்ளனர்.

இந்த காட்சிகளை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து வீடியோ வைரலானது. இதுபற்றி கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, இருவரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் வாங்கி உள்ளது. பின்பு அவர்களை சஸ்பெண்டு செய்துள்ளது.

அந்த மாணவர் மற்றும் மாணவியின் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்