உத்தரகாண்ட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்

உத்தரகாண்ட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2022-12-24 12:41 GMT

டேராடூன்,

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டாய மத மாற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்க பல்வேறு மாநிலங்களும் சட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவர்களுக்கு சிறை தண்டனை, அபராதமும் விதிக்கப்பட்டு வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கட்டாய மத மாற்றத்தை தடை செய்யும் வகையில் கட்டாய மத மாற்ற தடை சட்ட மசோதாவை உத்தரகாண்ட் அரசு கடந்த நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா சட்டமாக மாறியுள்ளது.

கவர்னரின் ஒப்புதலையடுத்து கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை விரைவில் அமல்படுத்த உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரகாண்ட் கொண்டுவந்துள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின்படி, ஒருவரை கட்டாய மதமாற்றத்தில் செய்தால் குற்றவாளிக்கு குறைந்த பட்சம் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்