குஜராத் கனமழை: குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை
குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக அம்மாநிலத்தின் வாபி - சில்வாசா நகரங்களுக்கு இடையே 10 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
சாலைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.