காந்தி நகரில் உள்ள மயானத்தில் ஹீரா பென் உடல் தகனம்; சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை உயிரிழந்தார். காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.

Update: 2022-12-30 04:08 GMT

காந்திநகர்,

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். மிகவும் இறுக்கமான முகத்துடன் சோகத்தை வெளிப்படுத்திய படி பிரதமர் மோடி காணப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்