ரெயில் நிலையத்தில் திடீரென பற்றி எரிந்த ரெயில்... அலறி அடித்து ஓடிய பயணிகள் - குஜராத்தில் பரபரப்பு

தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-04-17 14:38 GMT

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் போதட் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலில் தீ திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதி பரபரப்புடன் கானப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பயணிகல் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக தீயை தண்ணீர் கொண்டு அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்