அரசு ஊழியர் தற்கொலை முயற்சி

அரசு ஊழியர் தற்கொலை முயற்சி செய்தார்.

Update: 2022-11-10 18:45 GMT

பெங்களூரு; பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 40). இவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். அவர் குமாரசாமி லே-அவுட் பகுதியில் உள்ள பெங்களூரு குடிநீர் வினியோக வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். மேலும், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தலகட்டபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அப்போது மகேஷ், தனது உயர் அதிகாரிகள் கொடுக்கும் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்