பெங்களூரு-பம்பை இடையே அரசு பஸ்கள் இயக்கம்

அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பெங்களூரு-பம்பை இடையே அரசு பஸ்கள் இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி முடிவு செய்துள்ளது.

Update: 2022-11-19 18:45 GMT

பெங்களூரு-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கா்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் பெங்களூருவில் இருந்து பம்பைக்கு அரசு பஸ் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெங்களூருவில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் பம்பைக்கு

'ராஜஹம்சா' பஸ் இயக்கப்பட உள்ளது. அதன்படி சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 1 மணி அளவில் இந்த பஸ் புறப்பட்டு மறுநாள் காலையில் 7.30 மணிக்கு பம்பையை சென்றடையும். இதே வழித்தடத்தில் வால்வோ பஸ் ஒன்று தினமும் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலையில் 6.45 மணிக்கு பம்பையை சென்றடையும்.

இதேபோல் மைசூரு ரோட்டில் உள்ள சேட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு ராஜஹம்சா பஸ்சும், பிற்பகல் 2.45 மணிக்கு வால்வோ பஸ்சும் புறப்பட்டு மறுநாள் காலையில் பம்பைக்கு வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்