அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-09-10 21:48 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா குடுரா கிராமத்தை சேர்ந்தவர் பீமா சங்கர் (வயது 45). அரசு பஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் செடம் பகுதியில் உள்ள அரசு பஸ் பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பீமா சங்கர் நேற்று பஸ் பணிமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்