இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.69¾ லட்சம் தங்கம் சிக்கியது

இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

Update: 2022-08-04 20:41 GMT

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கிய விமான பயணிகளிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த பயணிகளிடமும் தங்கம் கிடைக்கவில்லை. பின்னர் இலங்கையில் இருந்து வந்த ஒரு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 2 பயணிகள் வைத்திருந்த உடைமைகளை சோதனை நடத்திய போது சில சோப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பரிசோதனை செய்து பார்க்கையில், சோப்புக்குள் தங்கம் இருப்பது தெரியவந்தது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக 2 பேரும் தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 2 நபர்களும் கைது செய்யப்பட்டாா்கள். அவர்களிடம் இருந்து 1 கிலோ 334 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.69¾ லட்சம் ஆகும். கைதான 2 பேர் மீதும் தேவனஹள்ளி போலீசாா் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்