கோவா: பா.ஜனதாவில் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய விரைவில் மனு - காங்கிரஸ் அறிவிப்பு
கோவாவில், பா.ஜனதாவில் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய விரைவில் மனு அளிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பனாஜி,
கோவா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களில் 8 பேர், கடந்த செப்டம்பர் மாதம் பா.ஜனதாவில் சேர்ந்தனர். இதனால், காங்கிரசின் பலம் 3 ஆக குறைந்துள்ளது.
இந்தநிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் கூறியதாவது:- பா.ஜனதாவில் சேர்ந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, விைரவில் சபாநாயகரிடம் மனு அளிப்போம். இதற்கு தேவையான ஆவணங்களை சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து வாங்கி வந்துள்ளோம். தகுதி நீக்க மனுவை முன்னாள் அட்வகேட் ஜெனரலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான அல்வரஸ் பெரேரா தயாரிப்பார். அம்மனு விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.