வீடுகளுக்கே சென்று சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிப்பு

சிவமொக்கா மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடுகளுக்கே சென்று சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

Update: 2022-08-10 14:56 GMT

சிவமொக்கா;

75-வது சுதந்திர தினவிழா

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்ற மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையே கர்நாடகத்தில் சுதந்திர தினத்தையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணி, அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களை கவுரவித்து தேசிய சின்னம், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிப்பு

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிவமொக்கா மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களை கவுரவித்து பாராட்டினர்.

அதன்படி சிவமொக்கா டவுனில் கலெக்டர் செல்வமணி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு பிரசாத், தாசில்தார் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் விநாயகா நகரில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி காசிநாத் ஷெட்டரின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.

பின்னர் அவர்கள், சுதந்திர போராட்ட தியாகியை சந்தித்து மாலை, சால்வை அணிவித்து தேசியகொடி கொடுத்து கவுரவித்தனர். இதே போல் சாகர், ஒசநகர், பத்ராவதி, சொரப் தாலுகாக்களில் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீட்டிற்கு சென்று அவர்களை கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்