குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை இன்னும் 15 நாட்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் தொடங்குவார்: ஜி.எம்.சரூரி தகவல்!

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.

Update: 2022-08-27 10:30 GMT

புதுடெல்லி,,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.

இதையடுத்து அங்கு மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.காங்கிரசில் இருந்து விலகியவர்களில் முன்னாள் மந்திரிகள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

குலாம் நபி ஆசாத்தின் நெருங்கிய நம்பிக்கையாளர் ஜி.எம். சரூரி, பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேற்று டெல்லியில் ஆசாத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குலாம் நபி ஆசாத் தனது சொந்தக் கட்சியைத் தொடங்கத் தயாராகிவிட்டார். கட்சியின் முதல் பிரிவு, ஜம்மு காஷ்மீரில் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் தொடங்கப்படும்.

புதிய கட்சியைத் தொடங்குவதற்கு முன், குலாம் நபி ஆசாத் தனது நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்த செப்டம்பர் 4 ஆம் தேதி ஜம்மு வருகிறார். ஆசாத் சித்தாந்த ரீதியாக மதச்சார்பற்றவர். மேலும் அவர் பாஜகவின் விருப்பப்படி செயல்படுகிறார் என்ற கேள்விக்கே இடமில்லை.

அவர் காஷ்மீரின் முதல்-மந்திரியாக நவம்பர் 2, 2005 முதல் ஜூலை 11, 2008 வரை பணியாற்றினார்.

மக்கள் அவரது ஆட்சியை பொற்காலமாக பார்க்கிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து ஜம்மு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகஸ்ட் 5, 2019க்கு முந்தைய ஜம்மு காஷ்மீர் நிலையை மீட்டெடுப்பது கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும்.

இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்