முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு 'இசெட் பிளஸ்' பாதுகாப்பு - செலவை அம்பானி குடும்பமே ஏற்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு ‘இசெட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-01 05:25 GMT

Image Courtesy: aajtak

டெல்லி,

ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், இந்திய பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மத்திய அரசு, மும்பை போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

முகேஷ் அம்பானிக்கு 'இசெட் பிளஸ்' பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வந்தது. ஆனால், இந்த பாதுகாப்பு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அம்பானி தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசெட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இசெட் பிளஸ் பிரிவு பாதுகாப்பிற்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானி குடும்பமே ஏற்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்