காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகுமா?

ஜம்முவில் நடைபெறும் பேரணியில் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சியை அமைப்பது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-09-04 04:04 GMT

ஸ்ரீநகர்,

ஜம்முவில் நடைபெறும் பேரணியில் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சியை அமைப்பது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி குலாம் நபி ஆசாத், விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த வாரம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த 73 வயதான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 26ல் கட்சியில் இருந்து விலகினார்.

அவரது வெளியேற்றம் கட்சியின் ஜம்மு காஷ்மீர் பிரிவில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பெருமளவில் வெளியேறத் தூண்டியது.காங்கிரஸ் மேலிடத்தை குறிவைத்த அவர், ராகுல் காந்தியின் மீது குற்றம் சாட்டினார்.

ஆசாத்தின் ராஜினாமா 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வந்துள்ளது.இதையடுத்து, புதிய கட்சி துவக்குவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று ஜம்மு செல்லும் குலாம் நபி ஆசாத் பேரணியை தொடர்ந்து நடக்கும் பொதுக் கூட்டத்தில், குலாம் நபி ஆசாத் தன் புதிய கட்சி குறித்து அறிவிப்பார் என தெரிகிறது.

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் முதல் மந்திரி பதவியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்