இந்தியாவில் அக்டோபர் இறுதியில் ஜெர்மனி அதிபர் சுற்றுப்பயணம்

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் வருகிற அக்டோபர் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் கூறியுள்ளார்.

Update: 2024-09-26 10:01 GMT

புதுடெல்லி,

இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே 7 தசாப்தங்களுக்கும் மேலாக தூதரக உறவுகள் இருந்து வருகின்றன. பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நீடித்த டிஜிட்டல் பொருளாதார ஊக்குவிப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் தூதரக அளவில் பகிரப்பட்ட ஆர்வத்துடன் இருப்பது முக்கிய தூண்களில் ஒன்றாக உள்ளது.

6-வது இந்தோ-ஜெர்மன் அரசாங்க ஆலோசனைகளுக்கான கூட்டத்தில் பங்கேற்க கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில் பிரதமர் மோடி ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் வருகிற அக்டோபர் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதுபற்றி ஜெர்மனிக்கான இந்திய தூதர் பிலிப் ஆக்கர்மேன் இன்று கூறும்போது, ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அரசாங்க ஆலோசனைகளில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றன.

கடந்த முறை, பிரதமர் மோடி 2022-ம் ஆண்டு பெர்லினுக்கு வருகை மேற்கொண்டார். தற்போது, ஜெர்மனியின் அதிபர் மற்றும் அவருடைய மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் குழுவினர் அக்டோபர் இறுதியில் இந்தியாவுக்கு வருவதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.

இந்த பயணத்தின்போது, இரு நாட்டு மந்திரிகளும் இருதரப்பு கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். ஜெர்மனி அதிபர் ஓலாப், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு கூட்டத்தில் பேசுவார். இதேபோன்று இரு தரப்பு குழுவினரும் ஒன்றாக சந்தித்து பேசுவார்கள். இதில், அடுத்த 2 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் பற்றி முடிவு செய்யப்படும். அதனால், இது ஒரு மிக முக்கியம் வாய்ந்த கூட்டம் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்