இந்தியாவுக்கு ஜெர்மனி வெளியுறவு மந்திரி 2 நாட்கள் சுற்றுப்பயணம்

இந்தியாவுக்கு ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னாலேனா பேயர்போக் வருகிற 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2022-12-01 16:19 GMT



புதுடெல்லி,


இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வாராந்திர ஊடக சந்திப்பின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடையே இன்று பேசினார்.

அவர் கூறும்போது, ஜெர்மனி மத்திய குடியரசின் வெளியுறவு மந்திரி அன்னாலேனா பேயர்போக் வருகிற 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பேயர்போக் டெல்லியில் தங்கும்போது, வருகிற டிசம்பர் 5-ந்தேதி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், அவருக்கு விருந்தளிக்கிறார். அன்றைய தினம் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை நடத்தப்படும்.

இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய பரஸ்பர நலன்கள் தொடர்புடைய ஆலோசனைகளிலும் அவர்கள் ஈடுபட உள்ளனர் என பக்சி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்