துப்பாக்கி முனையில் தோட்ட காவலாளிக்கு கொலை மிரட்டல்

துப்பாக்கி முனையில் தோட்ட காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழில் அதிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-10-14 18:45 GMT

மைசூரு:

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் 6 ஏக்கரில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கிரீஸ் என்பவர் 5 ஆண்டு காலம் வரை குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்கிடையே குத்தகை காலம் முடிந்ததால் உரிமையாளர் தோட்டத்தை தன்வசம் எடுத்துகொண்டார். மேலும் தோட்டத்திற்கு காவலாளியாக நாகராஜ் என்பவரை பணியில் அமர்த்தினார். இந்த நிலையில் நேற்று காலை நாகராஜ் வழக்கம்போல் தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டார். இந்த சந்தர்ப்பத்தில் கிரீஸ், தனது 2 நண்பர்களுடன் தோட்டத்திற்குள் நுழைய முயன்றார்.

அப்போது காவலாளி நாகராஜ், அவர்களை உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் துப்பாக்கியை எடுத்து காண்பித்து காவலாளி நாகராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்து நுழைவு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதுகுறித்து நஜர்பாக் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தொழில் அதிபர் கிரீஷ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்