காரில் கடத்திய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்

தெலுங்கானாவில் இருந்து மராட்டியத்துக்கு காரில் கடத்திய ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-04-08 21:15 GMT

பெங்களூரு:

தெலுங்கானாவில் இருந்து மராட்டியத்துக்கு காரில் கடத்திய ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன சோதனை

பீதர் மாவட்டம் உம்னாபாத் பகுதியில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அவர்கள் வழிமறித்தனர். காரில் இருந்த 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் சோதனை நடத்தினர். அப்போது சாக்கு மூட்டையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் இருந்த 4 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்

அப்போது அவர்கள், தெலுங்கானாவில் இருந்து பீதர் வழியாக மராட்டியத்துக்கு கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காரையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர்.

கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பீதர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்